அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ்
பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று
சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள்
நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி
செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர்
ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட செடியன் குளம் கடந்த சில வாரங்களாக அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், கடந்த மூன்று தினங்களாக சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஆற்று நீராலும் நிரம்பி, ஏரி போல் காட்சியளிக்கிறது.
தற்போது அதிரையில் மிதமாக பெய்துவரும் தொடர் மழையையும் பொருட்படுத்தாது இப்பகுதியினர் குளத்தை ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். நீரின் மட்டம் இன்னும் 1 அடி உயர்ந்தால், குளம் நிரம்பி வழிந்து ஓடும் நிலையில் உள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்குவதற்கு ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் குளத்திலிருந்து நீர் நிரம்பி இதன் இணைப்பில் உள்ள வாய்க்கால் வழியாக அருகில் உள்ள கீழத்தெரு செயனாங் குளத்திற்கு தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, செடியன் குளத்தின் மேட்டை சுற்றி காணப்படும் புதர்களையும், தேவையற்ற வளர்ந்து காணப்படும் செடி கொடிகளையும் அப்புறப்படுத்தவும், பெண்கள் குளிக்கும் கரையை சுற்றி பிரதியோகமாக தடுப்பு வேலி ஏற்படுத்தவும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் குளத்தின் மேட்டு பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும் கோரிக்கை எழுத்துள்ளது. மேலும் செடியன் குளத்திலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் அருகில் உள்ள தாழ்வான பகுதியாக இருக்கும் பிலால் நகரில் புகாதவாறு முன்னேற்பாடுகளை செய்யவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்தின் புகை படங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...
நிரம்பும் செடியன் குளம்
அதிரை பேரூர் நிர்வாகத்தின் முயற்சியில் செடியன் குளத்திற்கு ஆற்று நீர்
தற்போது மூன்று நாட்களாக வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் சில தினங்களில்
குளம் நிரம்பும் என்று எதிர்பார்க்கபடுகிறது.மேலும் குளத்தின் நீர் மட்டம்
அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் குளத்தில் குளிக்க துவங்கி விட்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment