அல்குர்ஆன் கூறுகிறது
2:205 وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ
2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
=========================================================
மீத்தேனும் கூடங்குளமும் அதன் பாதிப்பும். ஆரியமும், திராவிடமும் செய்யும் மறைமுக இனபடுகொலை திட்டங்கள்.
மீதேன் வாயுவை உற்பத்தி செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கும் கிரேட் ஈஸ்டர்ன்
எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
கையெழுத்தானது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்
முன்னிலையில் தமிழக அரசு சார்பாக தொழில் துறையின் முதன்மைச் செயலர் ராஜிவ்
ரஞ்சன் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர்
மற்றும் தலைமைச் செயல் அலுவலருமான யோகேந்திரகுமார் மோடி ஆகியோர்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் சுரங்கம் மற்றும்
கனிமத் துறை ஆணையர் தங்க பெருமாள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன்
நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்க அலுவலர் பிரசாந்த் மோடி
பொது மேலாளர் எஸ்.ராம்மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment