அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Sunday, November 30, 2014

ஒரே நாளில் முப்பது லட்சம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை

தஞ்சாவூர்: ஒரே நாளில் முப்பது லட்சம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை செய்திருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்.'பசுமை தஞ்சை' என்கிற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரான சுப்பையன் இந்த மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சி செய்திருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் மரங்கள் குறைந்து போனதால் மழையளவும் குறைந்திருப்பதாக எண்ணி இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஒரு ஊராட்சிக்கு குறைந்தது ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டிருக்கிறது. இதில் தேக்கு, புன்னை, குமுளி தேக்கு, ரோஸ் வுட் மற்றும் பூச்செடிகள் நடப்பட்டிருக்கின்றன.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் பழஞ்சூர் ஊராட்சியில் தொகுதி எம்.எல்.ஏ.வான ரெங்கராஜன், ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் பஞ்சாயத்து அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். காலை பத்து மணிக்கு தொடங்கி இந்த திட்டம் பனிரெண்டு மணிக்கு முடிவடைந்தது.

வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: கே.குணசீலன் 

Thanks to: Vikatan EMagazine 
 http://news.vikatan.com/article.php?module=news&aid=35528&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

No comments: