அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, November 18, 2014

தேனைப் பற்றிய ஒரு சில பயன்மிக்க தகவல்கள்

அல் குர்ஆன் கூறுகிறது

16:68   وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
16:68. மேலும், (பாருங்கள்!) உம் இறைவன் தேனீக்கு இவ்வாறு வஹி அறிவித்தான்: “மலைகளிலும் மரங்களிலும் பந்தல்(களில் படரும் கொடி)களிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள்!
16:69   ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
16:69. மேலும், பலதரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள்! உன் இறைவன் சீராக அமைத்துத்தந்த வழியில் சென்று கொண்டிரு!” அந்தத் தேனீக்களின் உள்ளே இருந்து பலவிதமான நிறமுடைய ஒரு பானம் வெளிப்படுகின்றது. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கிறது. திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது.
___________________________________________________________________________________
தேனீ
மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும்.

தேன் எவ்வாறு உருவாகிறது?
நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல.. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை.

தேனிலுள்ள சத்துக்கள்:
200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள்கள் தேனில் உள்ளன. இதிலிருந்தே தேனின் மகத்துவத்தை நாம் அறியலாம். அதாவது ஒன்றரை கிலோ மாமிசம், மற்றும் ஒன்றே கால் லிட்டர் பால் அளவிற்கு 200 கிராம் தேனில் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இது ஆச்சர்யம் கலந்த உண்மை.

யார் யாரெல்லாம் பருகலாம்?
தேனை யார் யாரெல்லாம் பருகலாம் என்ற விதிமுறையெல்லாம் கிடையாது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய்வாய்ப்பட்டவர்களும் பருகலாம். பிணி தீர்க்கும் மருந்துதான் தேன். அந்தக் காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தேனோடு மற்ற மருந்துகளை உண்ணக்கொடுப்பர்.

தேன் சாப்பிடுவதால் இரத்திலுள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) அதிகரிக்கிறது. குடல்புண்கள், ஜூரம், இருமல், இருதய நோய்கள்(Ulcer, fever, cough, heart disease) போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம், சீதிபேதி (Indigestion, Diarrhea) போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

வயிற்றைச் சுத்தப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. இதிலுள்ள பொட்டாஷியம் மூட்டு வலையைப் போக்குகிறது.

வயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் (Constipation, stomach problems) அனைத்தும் நீங்கிவிடும்.

தூக்கத்தைத் தூண்டும் தேன்:
குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக் கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தேன் தேனீக்கு மட்டுமல்ல.. மனிதனுக்கும் சிறந்த உணவாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல், இரைப்பை (Heart, lung, gastric) ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். அதோடு இரத்த நாளங்களிலும், குடலிலும்(Blood vessel, bowel ) சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

தேன் சிறுநீர் அடைப்பை (Urinary obstruction) நீக்கும்

தேன் மலச்சிக்கலை (Constipation) குணப்படுத்தும்

கபத்தால் (Phlegm) ஏற்படும் இருமல் போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த நிவாரணி.

இளம்சூடான பாலில் சிறிதளவு தேன்கலந்து பருகினால் உறக்கம் உங்களைத் தழுவும்.

பெரும்பாலான மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கிய மருந்துப்பொருளாக சேர்க்கப்பட்டிருக்கும்.

தேனைப் பற்றிய ஒரு சில பயன்மிக்க தகவல்கள்:
1.தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
2.மாதுளம் பழச்சாறுடன் (Pomegranate fruit) தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.
3.எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
4.இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.
5.ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
6.ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.
7.நெல்லிக்காயுடன் (Indiangosseberry) தேன் கலந்து சாப்பிட 'இன்சுலின்' சுரக்கும்.
8.கேரட்டுடன் தேன்(Honey) கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.
இவ்வளவு பயனை அளிக்கும் தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் பற்றிய ஒரு சில தகவல்களையும் தெரிந்துகொள்வோமே..!

தேனீக்கள் பற்றிய சிறப்புத் தகவல்கள்:
1.மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது தேனீக்கள்.
2.புயல் (Storm) வருவதை முன்கூட்டியே உணரும் சக்தி தேனீக்கு உண்டு.
3.தேன் எடுக்கப் போகாத தேனீ ஆண் தேனீ.
4.ஒரு கிலோ தேனுக்கு ஆறு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் பூக்களை தேனீக்கள் சந்திக்கின்றன.
5.தேனீக்களின் எச்சமே (Residue of the bees) நாம் சுவைக்கும் தேன்.
6.ஒரு தடவை கொட்டியவுடன் தேனீ தனது கொடுக்கை இழந்துவிடும்.
7.தேனீ ஒரு சைவ உண்ணி
8.ஐந்து கண்களைக் கொண்டது தேனீ. எனவே தேனீயின் பார்வை மிக கூர்மையாக இருக்கும்.
9.தேனீக்களுக்கு இரைப்பைகள் இரண்டு.
10.ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான தேனீக்கள் உண்டு.
11.தேனீக்கள் வாழும் கூடுகள் அதனுடைய தேன்மெழுகினால் ஆனவையே.
12.தேனீக்கள் மூன்று வகைப்படும். (ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ, இராணித் தேனீ)
13.ஏராளமான நுண்ணறைகள் கொண்டது தேன்கூடு. மூன்று வகை தேனீக்களும் தனித்தனி அறைகளிலேயே வாழும்.

தேனீ நடனம்:
வேலைக்காரத் தேனீக்கள் தேன் இருக்கும் இடத்தை அறிந்து வந்து மற்றத் தேனீக்களுக்கு நடனமாடித் தெரிவிக்கின்றன. இதை தேனீக்கள் நடனம் என்கிறோம்.
1.ஒரு சொட்டுத் தேனை சேகரிக்க தேனீக்கள் பதினாறு மைல்தூரம் கூட பறந்து செல்கிறது.
2.மரத்தின் கிளை, கரடு முரடான பாறை இடுக்குகள் ஆகியவை தனக்கு ஏற்ற உறைவிடமாக (இருப்பிடமாக) தேனீக்கள் தேர்ந்தெடுக்கின்றன. தேனீக்களில் ராணித் தேனீயே (The Queen Bee) அனைத்து முட்டைகளையும் இடுகின்றது
3.தேனீயின் உடலில் 12 வளையங்கள் உள்ளன.
4.தேனீ நிமிடத்திற்கு அதிக பட்சமாக 400 முறை இறக்கையை அசைக்கும்.
5.எறும்பு இனத்தைச் சேர்ந்தது தேனீ.

நன்றி
நண்பர் செந்தில்குமார் NS

No comments: