அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ்
பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று
சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாதி
மத பேதமின்றி நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர்
அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும்,
நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து
வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் வரத்து அதிகரித்தது. பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. மீண்டும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்தால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வழிந்து ஓடும் நிலை எட்டிவிடும்.
செடியன் குளத்தின் தென்கரையில் பழுதடைந்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் வழியே கசிந்து வீணாக வெளியேறும் குளத்தின் நீரை பாதுகாக்கும் பொருட்டு கிண்ணற்றின் அடியில் உள்ள ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக ஊழியர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.