அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Monday, December 1, 2014

மீத்தேன் என்னும் அரக்கன் & காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!



மீத்தேன் என்னும் அரக்கன்!
இது கலிபோர்னியா மாகாணத்தின் காட்சி.
நாளை நமது ஆறுகளின் நிலையும் இது தான்.
எந்நிலையிலும் மீத்தேன் திட்டத்தை அனுமதிக்காமல் தடுப்போம்.
நமது விவசாய நிலைத்தையும்,
நம் விவசாயிகளையும் காப்போம்.

[உலக தமிழர்கள் ஒன்று சேருவோம்]

https://www.facebook.com/photo.php?fbid=728756370526959&set=a.361304510605482.78841.100001778085076&type=1
 -------------------------------------------------------------------------------------------------------------

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...

மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே...

உங்களுக்காகவே இந்த நல்ல செய்தி!

வீட்டிலேயே வளர்க்கக்கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது.

தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்.
முடியாதபட்சத்தில்,
இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

https://www.facebook.com/permalink.php?story_fbid=761822643854180&id=675080809195031&fref=nf
 --------------------------------------------------------------------------------------------------------------
இப்படியும் ஒரு கிராமம்! ஆச்சரியம்!
________________________________________

எங்கள் ஊரில் எந்த ஒரு தீய பழக்கமும் கிடையாது. இது இந்த காலத்திலிருந்து இல்லை எங்கள் முன்னோர்கள் கடைபிடித்தது. சுதந்திரத்துக்கு முன்பே எங்கள் ஊர் பெரியவர்கள் சேர்ந்து "நாங்களோ, எங்களின் சந்ததிகளோ சிகரெட், தண்ணி விற்றால் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து தண்டனை கொடுக்கலாம், அடிக்கலாம்" என பல சட்டங்கள் போட்டு அதனை ஒரு பத்திரத்தில் பதிவு செய்து ஊர் மக்கள் எல்லோரும் கையெழுத்திட்டனர். அந்த பத்திரத்தின் நகல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி விற்றாலோ அபராதம் விதிக்கப்படும். பொதுமக்களால் தண்டிக்கப்படுவர். தண்டனை பெற்றவர் காவல்துறையில் புகார் செய்தால் மனு ஏற்கப்படாது. தள்ளுபடியாகும். ஏனென்றால் முன்னால் அவர்கள் தவறு செய்ய மாட்டோம் என அளித்த ஊர்மக்கள் எல்லோரும் கையெழுத்திட்ட பத்திரம் இருக்கிறது. வருமானம் பெரிதல்ல, மானம்தான் பெரிது. உடல் நலனை விட வியாபாரம் பெரிதல்ல. வெளியூர் மக்கள் வந்து சிகரெட் கேப்பார்கள். இந்த ஊரில் விற்கமாட்டோம் என்று கூறுகையில் பெருமையாக உள்ளது" 

எங்கள் முன்னோர்கள் செய்தது நல்லதுதான். இதனால் எங்கள் ஊர் மக்கள் பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் உள்ளனர். முன்னோர்கள் தீமைக்கு அடிமையாகியிருந்தால் நாங்களும் வீணாகிடு போவோம். இவர்களால் ஊருக்கும் பெருமை. பிள்ளைகளும் பயந்து தவறுகளையும் செய்வதில்லை. இதனால்தான் எங்கள் பிள்ளைகள் விளையாட்டில் சாதிக்கின்றனர்.
- ஊர் மக்கள்

தீமைகளுக்கு எதிராக தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு தலைநிமிர்ந்து இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறதென்றால் ஆச்சரியமே!

https://www.facebook.com/photo.php?fbid=811645828899629&set=a.570524386345109.1073741825.100001626587762&type=1

No comments: