அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, December 2, 2014

அதிரையில் "பசுமைத்திட்டம்" மரம் நடும் விழா

தமிழக அரசின் "பசுமைத்திட்டம்" மரம் நடும் விழா நேற்று முன் தினம் காதர் மொய்தீன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் dr.A.ஜலால், மூத்த பேராசிரியர் Dr.Sசாகுல் ஹமீது, NSS திட்ட அலுவலர்கள் பேரா,M.பிரேம் நவாஸ், பேரா,கபீர், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர், முக்கிய பிரமுகர்கள் துணை தலைவர் பிச்சை,அதிமுக நகர துணை செயலாளர் தமீம் ஜனாப்,ஹாஜா பகுருத்தீன்,குமார் ஆகியோருடன் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 




Thanks to News Source:
http://www.adiraixpress.in/2014/12/blog-post_99.html#.VH2qX2eaUos

No comments: