இந்தப் பதிவை வாசிப்பவர்கள், படிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் நடைமுறைப் படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றால் ஊரை சுத்தம் செய்ய சொல்லவில்லை மாறாக நமது வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்திருந்தாலே பொதுமானதாகும், இப்படி ஒவ்வொருவரும் தன் வீட்டையும் வீதியையும் சுத்தமாக வைத்திருந்தால் நம் ஊரே சுத்தமாகிவிடும்.
வீட்டில் உள்ள குப்பைகளை எந்தவொரு சிந்தனையுமின்றி சாலைகளில் கொட்டுகின்றோம். அதனால் வீதியில் எவ்வளவு துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்று சிந்திப்பதில்லை.
வீட்டு கொல்லையில் குப்பைகளை சேர்த்து வைத்து வாராவாரம் குப்பைகளை பேரூராட்சி குப்பை அள்ளும் வண்டி வரும் பொழுது கொட்டி விடலாம். ஆனால் நாம் நமது வீடு சுத்தமானால் போதும், சாலையில் கொட்டினால் யார் கேட்கப்போறது என்ற சுயநலப் போக்குதான் இன்று நமதூரில் தெருவுக்கு தெரு குப்பைகள் குவிந்து கிடப்பதற்கு காரணம்.நான் கண்ட ஒரு சம்பவம்! 'சமீபத்தில் ஒரு நாள் மழையையும் பாராமல் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அள்ளினார்கள். ஆனால் அடுத்த 3 மணி நேரத்தில் குப்பைகள் அப்பகுதி முழுவதும் குவிந்து கிடக்கிறது. இது யாரின் தவறு? சற்று சிந்தியுங்கள்!
யார் தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டுவது ஒரு ஊடகத்தின் கடமை. அது மக்களாக இருந்தாலும் சரி ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரியே. அந்த வகையில் நமதூரில் குவியும் குப்பைகளுக்கு மக்களும் ஒரு காரணம் தான்.
நூருல் அஹமது இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

http://www.adiraipirai.in/2014/12/blog-post_43.html
இனி குப்பைகளை வீதியில் வாரி வீசாமல் முறையாக கொல்லைபுறங்களில் சேமித்து அதை முறையாக காலத்தே அகற்றுவதற்கும் ஒவ்வொருவரும் சபதமேற்போமாக!
No comments:
Post a Comment