அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, December 2, 2014

தேசிய தினத்தை முன்னிட்டு இன்று ஷார்ஜா ரோலா பூங்கா திறக்கப்பட்டது

ஷார்ஜா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரோலா சதுக்கம் (ROLLA SQUARE) மிகவும் புகழ்பெற்ற பகுதியாகும்.


ரோலா சதுக்கத்தை சுற்றி பல வணிக நிறுவனங்களும், தமிழ் ஜூம்ஆ பள்ளியும், அனைத்து வங்கிகளும் ஒருமிக்கப்பட்ட பேங்க் ஸ்ட்ரீட் போன்ற பகுதிகளாலும் எப்போதுமே ஜனத்திரளால் நிரம்பி வழியும் ஒரு சுறுசுறுப்பான பகுதியாகும். வெள்ளி மற்றும் விடுமுறை தினங்களில் இந்தியர்களும் பிற வெளிநாட்டு சகோதரர்களும் நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்து கொள்ள வேடந்தாங்கலில் பறவைகள் குழுமுவது போல் ரோலாவில் ஒன்று கூடுவார்கள்.

 இது பழைய ரோலா

இது புதிய ரோலா

அத்தகைய ரோலா பகுதியை மென்மேலும் அழகுபடுத்த சுமார் 22 மில்லியன் திர்ஹத்தை செலவழித்து பூங்காவனமாக மாற்றத் தீர்மானித்த ஷார்ஜா நிர்வாகம் இந்த வருட இறுதிக்குள் திறந்திட திட்டமிட்டு அதை இன்று சாதித்து காட்டியுள்ளனர்.

 ROLLA FOUNTAIN

இன்று காலை சுமார் 10.30 மணியளவில் அமீரகத்தின் 43 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரோலா பூங்காவை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியும் படமும்

ஷார்ஜாவிலிருந்து 'பொறியாளர்' முஹமது நயீம்
S/o. Engg. Mohamed Meera
(கடற்கரை தெரு, அதிரை)

No comments: