இன்றைய தினமலரில் வந்த கட்டுரையில் இருந்து சில வரிகள்.
//தமிழகத்தில், ஒரு காலத்தில், தோல் தொழிற்சாலை கழிவுகள் விவசாயத்திற்கு
சிறந்த உரமாக பயன்பட்டன. ஆலைக் கழிவுகளை, விவசாயிகள் போட்டி போட்டு
வாங்கும் நிலை இருந்தது. அப்போது, ஆவாரம் பூ பட்டை போன்ற தாவர பட்டைகளை
வைத்து, இயற்கை பதனிடுதல் முறை நடந்தது தான் இதற்கு காரணம்.
கடந்த,
1960க்குப் பின், வெளிநாடுகளில் இருந்து ரசாயனம் கொண்டு, குறைந்த
காலத்தில், பதனிடும் பணிகளை முடிக்கும் தொழில்நுட்பம் புகுந்தது. இதில்,
குரோமியம், நிக்கல் போன்ற வேதிப் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
இயற்கை முறையில், 45 நாட்கள் ஆன நிலையில், ரசாயன முறையில், 15, 20
நாட்களில் பணிகள் முடிந்தன. வருவாய் கிடைப்பதால் ஆலைகள் அனைத்தும், நவீன
தொழில்நுட்பத்துக்கு மாறின. //
ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்,
நச்சுத்தன்மை நிறைந்ததாக உள்ளது. ரசாயன கழிவுகள் நீர் நிலைகளில்
விடப்பட்டு, நீர் நிலைகள் மாசுப்பட்டு விட்டன. படிப்படியாக நிலத்தடி நீரும்
நச்சுத்தன்மைக்கு மாறி, விவசாயம் அடியோடு முடங்கி விட்டது என்கின்றனர்
நீர்வள ஆர்வலர்கள்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து, விவசாய உற்பத்தி அதிகம் நடந்த பகுதி வேலுார் மாவட்டம் தான். இங்குள்ள பாலாறை ஒட்டிய வயலுார், ஒரு காலத்தில் துறைமுகம் போல் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், 15 ஆண்டுகளாக, விவசாயம் அடியோடு முடங்கி விட்டது.மக்களை வினோத நோய்களுக்கு உள்ளாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷமாகவும், ஆலைக்கழிவுகள் கொட்டப்படும் இடமாகவும் வயலுார் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து, விவசாய உற்பத்தி அதிகம் நடந்த பகுதி வேலுார் மாவட்டம் தான். இங்குள்ள பாலாறை ஒட்டிய வயலுார், ஒரு காலத்தில் துறைமுகம் போல் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், 15 ஆண்டுகளாக, விவசாயம் அடியோடு முடங்கி விட்டது.மக்களை வினோத நோய்களுக்கு உள்ளாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷமாகவும், ஆலைக்கழிவுகள் கொட்டப்படும் இடமாகவும் வயலுார் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
// முன்பு தி இந்துவில் வந்த கட்டுரையிலிருந்து
வேலூர் மாவட்டத் தோல் தொழிற்சாலைகளில் தயாராகும் தோல் பொருட்கள் அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு
10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைப்பதாக மத்திய அரசு
குறிப்பிடுகிறது. ஆனால், சுற்றுச்சூழல் சார்ந்த பொருளாதார வல்லுநர்களோ
ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும் இன்னொரு பக்கம் கழிவு
நச்சு பாதிப்பு மூலமும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு உருவாக்கம்
செய்தல், இயற்கை வளம், மனித வளம் பாதிப்பு ஏற்படுதல் ஆகியவற்றாலும்
ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக
குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்
தோல் தொழிற்சாலை தொழிலை Dirty industry பட்டியலில் வைத்துள்ளன. அதனால்தான்,
அந்த நாடுகள் தோல் பொருட்களை தயாரிக்காமல் இங்கிருந்து கொள்முதல்
செய்கின்றன. //
// லாபவெறி பிடித்த முதலாளிகளின் தொழிற்சாலைக் கழிவுகளாலும், தாயின்
முலையையும் அறுத்து ரத்தம்குடிப்பது போல் வெறி பிடித்து மணல்கொள்ளைகள்
செய்த அயோக்கியர்களாலும், அதை முதலாக்கி தங்கள் வாய்க்கரிசியைச் சேர்த்துக்
கொண்ட அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தாலும் வடதமிழகமே நாசமானது.
வளர்ச்சி வளர்ச்சி என்று யாரை வளர்த்தோம், எதை நாம் இழந்தோம்..
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன் பாலாற்றுப் பகுதியில் இருந்த மண்வளமும்,
நீர்வளமும் இப்போதுள்ள நிலையும் கண்முன்னால் கண்டவர்கள் அறிவார்கள், நாம்
வருங்காலத்தை முழுவதுமாக அழித்துள்ளோம். வளர்ந்த நாடுகளின் தேவைக்காக நம்
கண்ணை இழந்துள்ளோம். வருங்காலத்தில் உணவுக்காக அந்நாட்டு
பெருநிறுவனங்களுக்குத் காலமெல்லாம் அடிமை சேவை செய்யப் போகிறோம்.
வளர்ச்சி என்பது தேவை தான், ஆனால் அது நம் மண்ணையும் மக்களையும் காவு கொடுத்தல்ல.
இனியாவது விழித்தெழுவோம். இந்தியா மு்தலான அநநிய நாடிகளின் சதிவலையைத் தகர்த்தெறிவோம்.
என் பெயர் பாலாறு
http://www.youtube.com/watch?v=K0k2jhQ4VJQ
(பூவுலகின் நண்பர்கள் உருவாக்கிய ஆவணப்படம்)
http://www.youtube.com/watch?v=K0k2jhQ4VJQ
(பூவுலகின் நண்பர்கள் உருவாக்கிய ஆவணப்படம்)
https://www.facebook.com/palani.periaswamy?fref=nf
No comments:
Post a Comment