அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Sunday, February 1, 2015

இரட்டை வாழையில் "ஜிக் ஜாக்" விவசாயம்.. மகாதானபுரம் விவசாயியின் அசத்தல்!

கரூர்: இரட்டை வாழையில் ஜிக் ஜாக் (முக்கோணம்) முறையில் வாழை விவசாயம் செய்து கரூர் மாவட்டம் மகாதானபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அசத்துகிறார். 


அந்தக் கால கல்லூரி படிப்பான பி.யு.சி (பிரி யுனிவர்சிட்டி கோர்ஸ்) படிப்பை முடித்து விட்டு தாய், தந்தையர்களின் தொழிலான செங்கல் வியாபாரம் செய்து பின்பு விவசாயத்தின் மீது நாட்டம் காட்டி விவசாய நிலங்களை வாங்கி விவசாயத்தில் பல சாதனைகளை செய்து வருகிறார் என்றால் அது கரூர் அருகே உள்ள மகாதானபுரம் விவசாயி ப.ஜெயபாலைத்தான் சேரும்.

இரட்டை வாழையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ப.ஜெயபால், இவர் அந்தக் கால பிளஸ் டூ எனப்படும் பி.யு.சி படிப்பை படித்து விட்டு குலத்தொழிலான செங்கல் சூளை வைத்து செங்கல் வியாபாரம் செய்து வந்தார். பின்னர் அவரது முழு கவனம் விவசாயத்தில் ஈர்க்கப்பட்டார். 




இவர் 1985 முதல் 2 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தார். பின்பு வாழை, கரும்பு, காய்கறிகள் என தனது வயல் வெளிகளில் என்னென்ன விவசாயம் செய்ய முடியுமோ என்று ஆராய்ந்து பல தானிய வகைகள், பழங்களை விவசாயம் செய்தார். 1994 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாமாயிலை தனது தோட்டத்தில் பயிரிடலாம் என யோசித்து ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பாமாயில் மரங்களை சுமார் 5 ஏக்கரில் பயிரிட்டார். அவரின் விடா முயற்சி மிகவும் பலன் தந்தது. இன்று வரை அவரது பாமாயில் விவசாயப் பயணம் வெற்றியையும், புகழையும் தந்துக்கொண்டு இருக்கிறது.

இரட்டை வாழையில் கடந்த 2005 ல் நெல் விளைச்சலில் மாவட்ட அளவில் வெற்றி கண்டு 1 ஹெக்டேரில் நெல் பயிட்டு 9 டன் அரிசியை அறுவடை செய்ததோடு, கரூர் மாவட்டத்திலேயே சிறந்த விவசாயிகளுக்கான முதல் பரிசை தட்டிச் சென்றார். வேளாண்மைத் துறை இவரை கொளரவித்ததோடு அத்துறையை சார்ந்த துணை இயக்குநர் சார்பில் பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கியது.

இரட்டை வாழையில் இதை தொடர்ந்து நெல் விளைச்சலில் 1 ஏக்கருக்கு 1 வருடத்தில் 20 டன் மகசூல் ஈட்டினார். நெல், கரும்பு, வாழை, பாமாயில் என பல்வேறு சாகுபடிகளை மேற்கொண்ட விவசாயி ப.ஜெயபால் மலைப்பிரதேசங்களில் விளையும் முட்டை கோஸ், பீட்ரூட், பீன்ஸ் இவைகளையும், இவரது தோட்டத்தில் உரிய பராமரிப்பில் மேற்கொண்டு அதையும் சாகுபடி செய்து வெற்றி பெற்றார். பின்னர் காவிரி டெல்டா பாசன விவசாயத்தில் தோட்டக்கால் முறைப்படி நஞ்சை விவசாய பூமியில் கத்திரியையும் பயிர் செய்து அதிக மகசூல் பெற்றார்.

இயற்கை விவசாயத்தை விரும்பும் விவசாயி ப.ஜெயபால் கடந்த 2000 ம் ஆண்டு முதல் வேளாண் கல்லூரி அதாவது அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள், பெரியகுளம் தோட்டக்கலைத்துறை மாணவர்கள், குமுலூர் பொறியியல் வேளாண் துறை மாணவர்கள் என இன்று வரை கிராம தங்கல் பயிற்சி மூலம் நேரடி பயிற்சி கொடுத்து வருகிறார்.

இரட்டை வாழையில் அதுமட்டுமில்லாமல் உழவர் ஆய்வு மன்ற உறுப்பினர், விவசாயிகளின் நண்பன் (அட்மா), கிருஷ்ணராயபுரம் வட்ட வாழை உற்பத்தி செயலாளர், மகாதானபுரம் நபார்டு உழவர் மன்றத் தலைவர், கிராம சமுதாய தணிக்கை குழு உறுப்பினர், பயிர் ஆர்வலர் குழு தலைவர், கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலைத்துறையின் முன்னோடி விவசாயி என பல்வேறு பொறுப்புகள் வகித்து வருவதோடு, கடந்த 2013 ம் ஆண்டு தினமலர் நாளிதழில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. அதே வருடத்தில் செப்டம்பர் 9 ம் தேதி குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த நரேந்திர மோடியின் விவசாயிகளின் கருத்தரங்கிலும் கரூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக கலந்து கொண்டு சான்றிதழும் பெற்றவர் ஆவார்.

தற்போது விவசாயி ப.ஜெயபால் ஜிக் ஜாக் (முக்கோணம்) முறையில் வாழையில் அடர்நடவு சாகுபடி மூலம் ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்த சாகுபடி மூலம் 1 ஏக்கருக்கு 1400 கன்றுகள் சாகுபடி, அதாவது சாதாரண நடவு முறையில் 900 கன்றுகள் மட்டுமே சாகுபடி செய்ய முடியும், ஆனால் ஜிக் ஜாக் முறையில் கூடவே 500 கன்றுகள் சேர்த்து சாகுபடி செய்ய முடியும். ஆகவே இந்த சாகுபடியில் வாழை விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் விவசாயி தெரிவித்தார். மேலும் இந்த வாழை சாகுபடியிலேயே ஊடுபயிராக மிளகாய், தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களை விவசாயம் செய்து அசத்தி வருகிறார்.

இரட்டை வாழையில் மேலும் இந்த ஜிக் ஜாக் முறையில் கன்றுக்கு கன்று இடைவெளி 2 அடியில் அடுத்த வரிசை 7 அடியில் மீண்டும் 2 கன்றுகள், மீண்டும் 7 அடியில் 2 கன்றுகள் என முக்கோணத்தில் விட்டம் 7 அடியாகவும், சாய்வுத்தன்மை 8 அடியாக கன்னுக்கு கன் மொத்த இடைவெளி கிழமேல் 14 அடி, தென் வடல் முதல் வரிசை என பின்பு முக்கோணம் பிடித்து கன்றுகளை நட வேண்டும். அடர்நடவுக்கு முக்கியமானது நல்ல ரக கன்றுகள், ஒரே மாதிரி தேர்ந்தெடுக்க வேண்டும்.

50 லிருந்து 60 நாள் நன்கு வளர்ந்த விதைக்கன்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்பு நடவு செய்யும் போது சீராக விவசாயம் செய்ய வேண்டும். 20 லிருந்து 30 நாள்கள் ஆகி இலைகள் வந்தவுடன் இலைவழி ஒரமாக பணானா நீயூட்ரீஷன், சூடாமானஸ், புளிச்ச தயிர் என ரசாயணத்தோடு இயற்கை விவசாயத்தை கலந்து செய்கிறார்.

மேலும் 2 டன் தொழு உரம் (குப்பை), 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 50 கிலோ கொட்ட புண்ணாக்கு, 30 கிலோ நாட்டு வெல்லம் 20 கிலோ அசோஸ்பைரில்லம், 20 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 10 கிலோ மைதா ஆகியவைகளை தொழு உரம் (குப்பையின்) மேல் பரப்பி நன்றாக கலக்கி பின் நன்றாக தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் சமமாக பரப்பிய உரங்கள் மீது கரும்பு தோகைகளை போட்டு மூடி 40 நாள் வைத்து விட்டால் போதும். அதன்பின்பு 5 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து கலந்து வைத்தோமானால் 45 நாள் தொழு உரம் உயிர் உரம் ஆகி விடுகிறது. பின்னர் 1 வாழைக்கு 1 கிலோ என உரத்தை பயன்படுத்தலாம் என யோசனைகளையும் மற்ற விவசாயிகளுக்கு சொல்லி வருகிறார்.

இவரை பற்றி தொடர்பு கொள்ள 09944540755 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mahadhanapuram-farmer-s-novel-farming-lures-other-farmers-220103.html

No comments: