அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Wednesday, March 11, 2015

கீழத்தெரு,மேலத்தெரு,புதுமனைத்தெரு சங்க முஹல்லாவாசிகளுக்கு குலோப் ஜாமூன் அன்சாரி அவர்கள் அளித்த பொதுநல வேண்டுக்கோள் மனு!

அதிரையில் உள்ள செடியன்குளம், செக்கடிக்குளம் மற்றும் மையவாடி அமைப்பது சம்மந்தமாக SKM.அகமது அன்சாரி (குலோப் ஜாமூன்) அவர்கள் தாஜுல் இஸ்லாம் சங்கம், அல்மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம், மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லாவாசிகளுக்கு பொதுநல மனு வேண்டுக்கோள் அளித்து உள்ளார்.

செடியன்குளம் சம்மந்தமாக தாஜுல் இஸ்லாம் சங்கம்,அல்மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் அளிக்கப்பட்ட மனு விளக்கம்:

தங்களுடைய முஹல்லா பாரம்பரியமானது, கட்டுப்பாடானது என்பதை அறிவேன். தங்கள் முஹல்லா ஜமாத்துக்கு சம்பந்தப்பட்ட ஊருக்கு பொதுவாக பயன்படுகிற செடியன்குளத்தை நம் முன்னோர்கள் (அல்லாஹ்வின் நல்லடியார்கள்) பொதுஜன பிரயோஜனத்திற்காக (தர்மத்தை) குளத்தை உருவாக்கி தந்துள்ளார்கள். இது பெரிதும் நன்மையான தர்ம காரியமாக போற்றப்படுகிறது.

மேலும் இந்த குளத்தில் பெண்கள் வழமையாக குளிக்கும் பகுதியில் வனக்காடுகள் போல் கருவ காடுகள் இருப்பதால் பாதுகாப்பு கருதிய பெண்கள் தண்ணீர் டேங்க் இருக்கும் பகுதி பக்கம் உள்ள குளத்தின் கரையில் குளிக்கிறார்கள். இந்த கரை ஆண்கள் பார்வை படும்படியாக இருக்கிறது. எனவே பெண்கள் குளிப்பதற்கு மறைவான தடுப்பு ஏற்படுத்த வேண்டும். மேலும் நான்கு திசைகளிலும் சித்த மருத்துவமுள்ள மூலிகை செடிகளை வளர்த்து அந்த செடி தண்ணீரில் பணிந்து இருக்கும்படி வளர்க்க வேண்டும்.

மேலும் மழை காலங்களில் காட்டாற்று தண்ணீர்களை சேமித்து வைத்து கொள்வதுடன் எக்காலத்திலும் செடியன்குளத்தில் தண்ணீர் இருக்கும்படியாக ஊற்று அதிகம் உள்ள நிலபகுதியை ஆய்வு செய்து கண்டுபிடித்து அந்த நிலத்தை கிரயம் வாங்கி ஆல்குழாயில் கிணறு 600 அடிக்கு மேல் தோண்டி அதற்கு ஒரு செட் அமைத்து சோலார் மின்சாரம் ஏற்படுத்தி மோட்டார்கள், பைப்புகள் அமைத்து தங்கள் ஜமாத் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.





அடுத்து செக்கடிக்குளம் சம்மந்தமாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அளித்த மனு விளக்கம்:

தங்கள் முஹல்லா ஜமாத் நூற்றாண்டை நோக்கி செயல்படுகிறது. தங்கள் முஹல்லா ஜமாதிற்குட்பட்ட செக்கடி குளத்தின் சுற்றுபுறத்தை தூய்மைபடுத்தி அழகுடன் சிறந்து விளங்க தர்ம சிந்தனையுள்ள (அல்லஹ்வின் நல்லடியார்) தன் தனிப்பட்ட சொந்த செலவில் செய்து வருவதாக தகவல் அறிந்தேன். அந்த குளத்தின் உட்பகுதியில் சித்த மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்த்து எந்த காலத்திலும் குளத்தில் தண்ணீர் இருக்கும்படி ஏற்ப்பாடு செய்யவேண்டியது அவசியமாகிறது.

தாங்கள் முஹல்லாவிற்கு தற்போது இரண்டு மையவாடிகள் தான் உள்ளன. இது பற்றாக்குறையாக இருக்கிறது. ஆலடிதெரு, புதுமனைதெரு, C.M.Pலைன், S.A.M.நகர், கல்லுக்கொல்லை இவைகளுக்கு ஒரு மையவாடியும். வண்டிப்பேட்டை, சுரைக்க கொல்லை, மஹ்தும் பள்ளி தெரு, பழஞ்செட்டி தெரு, A.J.நகர் இவைகளுக்கு ஒரு மைய வாடியும் புதிதாக ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. வெகுதூரம் ஜனாஸாவை தூக்கி கொண்டும் மூட்டு வலியால் பெரியவர்கள் அவதிப்படுவதையும் உணர முடிகிறது. எனவே என்னுடைய பொதுவான வேண்டுகோளை மேற்படி தெருவாசிகள் சிந்தித்து நிறைவேற்றி தரும்படி கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.



Thanks to: Adiraipirai
http://www.adiraipirai.in/2015/03/blog-post_43.html        

No comments: