அதிரை காதிர் முகைதீன் கல்லூரி என்சிசி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஜலால் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மழைநீர் சேகரிப்பை பற்றி விழிப்புணர்வு உண்டாக்கும் வாக்கியங்களை கொண்ட பலகைகளை கையிலேந்தி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஊர்வலமாக அதிரையின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தனர். இதில் காதிர் முகைதீன் கல்லூரி லியோ கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய சூழலில் மழைநீரை சேகரிப்பது பற்றிய முக்கியத்துவம் மற்றும் அச்சேகரிப்பின் கட்டாயம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இப்பேரணி அமைந்தது. மேலும் மாணவர்களுக்கு பலவகையான மழை நீர் சேமிப்பு முறைகள் பற்றியும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. தேசிய மாணவர் படை பிரிவின் திட்ட அதிகாரி மேஜர் முனைவர் எஸ். கணபதி இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
Thanks to news source: Adirai News
No comments:
Post a Comment