அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Saturday, October 11, 2014

மரங்கள் செய்யும் சமூக சேவை..

ஒரு மரம் சமூகத்திற்கு செய்யும் சேவையின் மதிப்பு ரூ. 15.90 லட்சங்களாகும்.

1. பத்து குளிர்சாதனப் பெட்டிகள் (ஏ.சி.) இருபத்து நாலு மணி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது.

2. பதினெட்டுப் பேருக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன.

3. பிராணவாயு உற்பத்தியின் மதிப்பு - ரூ.3 இலட்சங்கள்

4. காற்றினைச் சுத்தமாக்குவதின் மதிப்பு ரூ. 5 இலட்சங்கள்

5. பூமியின் மேலே இருக்கும் மண்சத்து- குறையாமல் பாதுகாக்க - ரூ.2 இலட்சங்கள்.

6. காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதின் மதிப்பு - ரூ 3 இலட்சங்கள்..

7. பறவைகளுக்கும்,விலங்குகளுக்கும் நிழல் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 2.50 இலட்சங்கள்.

8. உணவுச் சத்துக் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 20000

9.பூக்கள் மற்றவை வழங்குவதின் மதிப்பு ரூபாய் 20000

ஆக ஒரு மரத்தின் மொத்த மதிப்பு- ரூ.15.90.லட்சங்கள்..

இவ்வளவு பயன்களைத் தரும் மரங்களை ஏதேதோ காரணங்களுக்காக மனிதர்கள் வெட்டி சாய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்..

வெட்டிய மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகளை வளர்ப்பதினால் வருங்கால சந்ததியினர் பயனுறுவர்.. 



வாழும் காலங்களில் எதைச் செய்கின்றோமோ இல்லையோ அட்லீஸ்ட் ஒரு மரக்கன்றையாவது நட்டுவிட்டு செல்வோமே!

மரங்களை வளர்ப்போம்! வருங்கால சந்ததியினரைக் காப்போம்.

 #மரம்_வளர்ப்போம்



Thanks to: Engr Sulthan

No comments: