adiraitiyawest
2050ஆம் ஆண்டில் உலகம் தண்ணீருக்காக சண்டை போட்டுக்கொள்ளும் நிலை உருவாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் ’வைலி இன்டர்டிஸிப்ளினரி ரிவ்யூஸ்’ என்ற பத்திரிக்கை
நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளது.
உலகில் தண்ணீரின் பயன்பாடு இப்போது உள்ளது போன்றே தொடர்ந்தால், இந்த
நூற்றாண்டின் மத்தியில் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று
கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின் பயன்பாடு மற்றும் மக்கள் தொகை பெருக்கம்
ஆகியவற்றை அடைப்படையாக கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய
தொழில்நுட்பங்கள், விழிப்புணர்வு காரணமாக, 1980-ஆம் ஆண்டு முதல் நீரின்
பயன்பாடு குறைந்துள்ளது என்பது உண்மை.
அதே சமயத்தில், தேவையான நீரை உற்பத்தி செய்வதும் தேக்கம் அடைந்துள்ளது.
தற்போது உலக மக்கள்தொகை சுமார் 700 கோடியாகும். 2050-ஆம் ஆண்டில் இது 960 கோடியாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல், கடல் நீரிலிருந்து உப்பைப்
பிரித்தெடுப்பதில் புதிய தொழில்நுட்பம் உருவாதல் ஆகியவைதான் இந்தப்
பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to: http://adiraitiyawest.blogspot.ae/2015/03/2050.html
No comments:
Post a Comment