1640. முஸ்லீம் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் கூறப்படுவதாவது,
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, 'இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) 'ஆத்' சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) 'இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்' (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்' என்று பதிலளித்தார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள்
நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக
இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே
வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது.
நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம்.
நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம்.
நன்றி
நாம் பயன்படுத்தும் தேன் உண்மையானதா? வாருங்கள் சோதித்துப் பார்க்கலாம்..
எத்தனை காலமானாலும் கெட்டு போகாத ஒரே பொருள் "தேன் "....
தேன் என்று சொல்லி சக்கரைபாகுவை விற்று விடுவோரும் உண்டு. தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா..???? என்பதை அறிவது எப்படி..?
அதற்கு இதோ இரண்டு வழிகள்..
1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல். பரவாமல் அப்படியே நிற்கும் .
2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால் அது நீரோடு கரையாமல் , நேராக கீழே சென்று அமரும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
No comments:
Post a Comment